< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
உலக யோகா தின விழா
|21 Jun 2023 12:15 AM IST
வாசுதேவநல்லூரில் உள்ள சட்டக்கல்லூரியில் உலக யோகா தின விழா நடந்தது.
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரியில் உலக யோகா தின விழா நடந்தது. கல்லூரி தாளாளர் எஸ்.டி.முருகேசன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் காளிசெல்வி வரவேற்று பேசினார். எஸ்.தங்கப்பழம் இயற்கை மற்றும் யோகா அறிவியல் மருத்துவ கல்லூரி விரிவுரையாளர்கள் நிலா, அரவிந்த் ஆகியோர் யோகாசன பயிற்சியின் அவசியம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து விளக்கி கூறினர்.
எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரி மாணவர் அமுதன் பல்வேறு யோகாசனங்களை செய்து காண்பித்தார். விழாவில் எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் மாரியப்பன் நன்றி கூறினார்.