< Back
மாநில செய்திகள்
உலக யோகா தினம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

உலக யோகா தினம்

தினத்தந்தி
|
23 Jun 2022 12:52 AM IST

திசையன்விளை அருகே உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.

திசையன்விளை:

திசையன்விளை அருகே நவ்வலடி தட்சணமாற நாடார் சங்கத்தின் சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளியில் உலக யோகா தினம் நடந்தது. தலைமை ஆசிரியர் ராஜராஜன் தலைமை தாங்கி, யோகா பயிற்சியை தொடங்கி வைத்தார். மாணவர்கள் பல்வேறு யோகாசனங்களை செய்தனர்.

நவ்வலடி பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்த யோகா பயிற்சிக்கு பஞ்சாயத்து தலைவர் ராதிகா சரவணகுமார் தலைமை தாங்கினார். வாழும் கலை இயக்க பயிற்சியாளர் ராமநாதன் யோகா பயிற்சியை நடத்தினார். இதில் கிராம மக்கள் பல்வேறு யோகாசனங்களை செய்தனர்.

மேலும் செய்திகள்