< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
உலக யோகா தினம்
|22 Jun 2022 10:44 PM IST
திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் உலக யோகா தினம்
திருக்கோவிலூர்
உலக யோகா தினத்தை முன்னிட்டு திருக்கோவிலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் யோகா தினம் நடைபெற்றது. முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பத்மாவதி தலைமையில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சிக்கு வக்கீல் சங்க செயலாளர் சுவிஜிசரவணகுமார் முன்னிலை வகித்தார். தலைமை எழுத்தர் சிவகுமார், துணை எழுத்தர் செல்லம்மாள் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து நீதிமன்ற ஊழியர்கள், வக்கீல்கள், வக்கீல்களின் உதவியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் யோகா பயிற்சி செய்தனர். முடிவில் அரசு வக்கீல் சங்கரன் நன்றி கூறினார்.