< Back
மாநில செய்திகள்
உலக வனவிலங்குகள் தின விழா
தேனி
மாநில செய்திகள்

உலக வனவிலங்குகள் தின விழா

தினத்தந்தி
|
4 March 2023 12:15 AM IST

ஆண்டிப்பட்டி வனச்சரகம் சார்பில், தனியார் பள்ளியில் உலக வனவிலங்குகள் தின விழா கொண்டாடப்பட்டது

ஆண்டிப்பட்டி வனச்சரகம் சார்பில், தனியார் பள்ளியில் உலக வனவிலங்குகள் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு வனச்சரகர் அருள்குமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் உலக வனவிலங்குகள் நாள் கொண்டாடப்படுவதற்கான காரணம், வனம் மற்றும் விலங்குகளை பாதுகாப்பதில் மக்களின் பங்கு, வனவிலங்குகளால் இயற்கைக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து வனச்சரகர் பேசினார். மேலும் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் பணியாளர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்