< Back
மாநில செய்திகள்
உலக சுற்றுலா தின போட்டிகள்
தென்காசி
மாநில செய்திகள்

உலக சுற்றுலா தின போட்டிகள்

தினத்தந்தி
|
26 Sept 2023 12:15 AM IST

தோரணமலை முருகன் கோவிலில் உலக சுற்றுலா தின போட்டிகள் நடந்தது.

பாவூர்சத்திரம்:

உலக சுற்றுலா தினத்தையொட்டி தோரணமலை முருகன் கோவில் அடிவாரத்தில் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழக சுற்றுலாத்துறை மற்றும் தோரணமலை நிர்வாகம் இணைந்து நடத்திய இப்போட்டிகளில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பல்வேறு பள்ளி மாணவ-மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 1 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக கட்டுரை எழுதுதல், படம் வரைதல் மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மாணவ-மாணவிகள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பக்தர்களுக்கு காலை, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அதிகாரி சீத்தாராமன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்