< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் உலக சுற்றுலா தின விழா கொண்டாட்டம்
|27 Sept 2022 7:18 PM IST
மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்திருந்த வெளிநாட்டினருக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
செங்கல்பட்டு,
உலக சுற்றுலா தினம் 27-ந்தேதி இன்று (செவ்வாய்க்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற சுற்றுலா தளமான மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில், உலக சுற்றுலா தின விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு பல வண்ணங்களில் பலூன்கள் பறக்கவிடப்பட்டன. மாமல்லபுரத்திற்கு வந்திருந்த வெளிநாட்டினருக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் களைகட்டின. இதில் வெளிநாட்டினரும் இணைந்து நடனமாடி மகிழ்ந்தது காண்போரைக் கவரும் வகையில் அமைந்தது.