< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
உலக துப்பாக்கி சுடும் போட்டி: பிருத்விராஜ் தொண்டைமான் வெண்கல பதக்கம் வென்றார்
|13 March 2023 12:46 AM IST
உலக துப்பாக்கி சுடும் போட்டியில் பிருத்விராஜ் தொண்டைமான் வெண்கல பதக்கம் வென்றார்.
ஐ.எஸ்.எஸ்.எப். ஷாட்கன் உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி கத்தார் நாடு தோஹாவில் நடைபெற்றது. இதில் இந்தியா, துருக்கி, ஆஸ்திரேலியா, ஸ்பெயின் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்தியா சார்பில் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இளவரசர் பிருத்விராஜ் தொண்டைமான் ட்ராப் ஷூட்டர் பிரிவில் கலந்து கொண்டார். இந்த போட்டி பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டது. இதில், 20/25 புள்ளிகளுடன் பிருத்விராஜ் தொண்டைமான் வெண்கல பதக்கம் வென்றார். ஐ.எஸ்.எஸ்.எப். உலக கோப்பையில் இந்தியாவின் முதல் பதக்கம் இதுவாகும். இவர் புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான் மற்றும் திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயர் ராணி சாருபாலா தொண்டைமான் ஆகியோரது மகன் என்பது குறிப்பிடத்தக்கது.