மயிலாடுதுறை
உலக ஓசோன் தினம்
|பூம்புகார் கடற்கரையில் உலக ஓசோன் தினம் அனுசரிக்கப்பட்டது.
திருவெண்காடு:
பூம்புகார் கடற்கரையில் உலக ஓசோன் தினத்தையொட்டி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தேசிய பசுமை படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றங்கள் இணைந்து கடற்கரையில் தூய்மை செய்யும் பணி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் தமிழ் ஒளி தலைமை தாங்கினார். மாவட்ட தேசிய பசுமைப் படையின் ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன் கலந்துகொண்டு கொடியசைத்து தூய்மை பணிகளை தொடங்கி வைத்தார். மண்டல திட்டமிடல் மற்றும் வளர்ச்சி குழுமத்தின் தலைவரும், காவிரிப்பூம்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சரஸ்வதி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கணேசன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் நிர்மலா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு கையுறைகளும், மஞ்சப்பைகளும் வழங்கப்பட்டன முடிவில் அரசு உயர்நிலைப்பள்ளி தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் இளையராஜா நன்றி கூறினார்.