< Back
மாநில செய்திகள்
உலக முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
மாநில செய்திகள்

உலக முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தினத்தந்தி
|
4 Jan 2024 12:05 PM IST

சென்னையில் வருகிற 7, 8 ஆகிய 2 நாட்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன துறையின் வளர்ச்சிக்கு அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வருகிற 7, 8 ஆகிய 2 நாட்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் முந்தைய முதலீட்டாளர்கள் மாநாடுகளை விஞ்சும் வகையில் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் பெறப்பட உள்ளன.

இதற்காக, குறு, சிறுதொழில்துறை சார்பில் மாவட்டங்கள் தோறும் முதலீட்டாளர்கள் சந்திப்பு நடத்தப்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான ஆயத்தப்பணிகளை தற்போது தமிழக தொழில்துறை செய்து வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனையில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, டி.ஆர்.பி. ராஜா மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். உலக முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும் கையெழுத்தாக உள்ள ஒப்பந்தங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

மேலும் செய்திகள்