< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக இதய தின கொண்டாட்டம்
|30 Sept 2023 12:05 AM IST
தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக இதய தின கொண்டாட்டப்பட்டது.
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உலக இதய தினவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் நீவாணி கதிரவன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக இருதய துறைத்தலைவர் டாக்டர் கணேஷ் வரவேற்புரை வழங்கினார். மேலும் மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் விஜயன் இருதயநோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முடிவில் இருதய அறுவை சிகிச்சை துறை மூத்த ஆலோசகர் டாக்டர் ஆஷிக்நிஹ்மதுல்லா நன்றியுரை வழங்கினார்.