< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
உலக சுற்றுச்சூழல் தினம்: நமக்கு இருப்பது ஒரே ஒரு பூமி; அதைப் பாதுகாப்போம் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்
|5 Jun 2022 2:21 PM IST
நமக்கு இருப்பது ஒரே ஒரு பூமி என்பதை நினைவில் கொண்டு, அதைப் பாதுகாக்கப் பாடுபடுவோம் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
சென்னை,
உலக சுற்றுச்சூழல் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் நமக்கு இருப்பது ஒரே ஒரு பூமி; அதைப் பாதுகாக்கப் பாடுபவோம் என்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "மீண்டும் மஞ்சப்பை, பசுமைத் தமிழகம் இயக்கம், முதன்முறையாக பசுமை காலநிலை மாற்றம் நிறுவனம், என்னும் சிறப்பு நோக்க வாகனம் போன்ற பல இயற்கைப் பாதுகாப்பு முயற்சிகளை தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ளது.
இந்த உலக சுற்றுச்சூழல் தினத்தில் நமக்கு இருப்பது ஒரே ஒரு பூமி என்பதை நினைவில் கொண்டு, எல்லா வகையிலும் அதைப் பாதுகாக்கப் பாடுபடுவோம்" என்று தெரிவித்துள்ளார்.