கள்ளக்குறிச்சி
நீதிமன்றத்தில் உலக சுற்றுச்சூழல் தினம்
|சங்கராபுரம் நீதிமன்றத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் நடைபெற்றது.
சங்கராபுரம்,
சங்கராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, விழுப்புரம் மற்றும் சங்கராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சட்ட விழிப்புணர்வு, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான பூர்ணிமா தலைமை தாங்கினார். கூடுதல் மாவட்ட நீதிபதி கீதாராணி முன்னிலை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி முல்லைவாணன் வரவேற்றார். திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சத்திய பிரியா, வட்டார கல்வி அலுவலர் அண்ணாதுரை, வழக்கறிஞர் சங்க தலைவர் தனசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து நீதிமன்ற வளாகம் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட நீதிபதி பூர்ணிமா மரக்கன்றுகளை நட்டு சிறப்புரையாற்றினார். இதில் அரசு வக்கீல் அண்ணாமலை, வக்கீல்கள் தாமரைச்செல்வன், திருநாவுக்கரசு, முருகன் சதாசிவம், சுரேஷ்பாபு, பாஷா பிரபாகரன், ரவி, ரமேஷ்குமார், சத்யமூர்த்தி, ரவீந்திரன், சசிகுமார் அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி விஜயகுமார் (பொறுப்பு) நன்றி கூறினார்.