< Back
மாநில செய்திகள்
உலக சுற்றுச்சூழல் தினம்: மாமல்லபுரம் கடற்கரையில் கழிவுகளை சேகரித்து விழிப்புணர்வு
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

உலக சுற்றுச்சூழல் தினம்: மாமல்லபுரம் கடற்கரையில் கழிவுகளை சேகரித்து விழிப்புணர்வு

தினத்தந்தி
|
5 Jun 2022 11:47 AM IST

மாமல்லபுரம் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் வீசிய கழிவுகளை சேகரித்து உலக சுற்றுச்சூழல் தினத்தில் புதிய விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.

மாமல்லபுரம்:

உலக சுற்றுச்சூழல் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த வருடத்திற்கான கருப்பொருளாக "மறுமுறை யோசிப்பது. மீண்டும் உருவாக்குவது, பாதுகாப்பது" என்பதை நிறுவி உள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

இதை முன்னிட்டு இன்று காலை மாமல்லபுரம் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் இடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அபிராமி யோகாலயா அமைப்பினர் கடற்கரை கோயில் தென் பகுதியில் பயணிகள் கடலோரத்தில் வீசி எரிந்த செருப்பு, மது பாட்டல்கள், புகைப்படங்கள், உணவுப்பைகள், உள்ளாடைகள், பிளாஸ்டிக் தட்டுகள், போன்ற கழிவுகளை சேகரித்து ஒன்றாக குவித்தனர்.

பின்னர் அங்கு வந்த சுற்றுலா பயணிகளை அழைத்து அவர்கள் வீசி எரிந்து விட்டு செல்லும் கழிவுப் பொருட்களை காண்பித்து அதனால் ஏற்படும் தீமைகளை விளக்கி கூறினார்கள். இதையடுத்து சுற்றுலா பயணிகளும், யோகா அமைப்பினரும் ஒன்றுகூடி சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்க உறுதிமொழி எடுத்தனர்.

மேலும் செய்திகள்