< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
உலக சுற்றுச்சூழல் தினம்
|8 Jun 2023 1:54 AM IST
நெல்லை கால்நடை மருத்துவக்கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.
நெல்லை கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மானூர் வட்டம் களக்குடி கிராமத்தில் பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடி என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணியும், கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும், வினாடி வினா, பேச்சு போட்டி உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டன. தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் நடந்த நிறைவு விழாவுக்கு கல்லூரி முதல்வர் செல்லப்பாண்டியன் தலைமை தாங்கி உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார் கலந்து கொண்டு, ஒரு மாணவர் ஒரு மரம் திட்டத்தை அறிமுகப்படுத்தி மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். முடிவில் மாணவர் தியானேஷ் நன்றி கூறினார்.