< Back
மாநில செய்திகள்
உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி: சென்னை மெரினா கடற்கரையில் இன்று நேரடி ஒளிபரப்பு
மாநில செய்திகள்

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி: சென்னை மெரினா கடற்கரையில் இன்று நேரடி ஒளிபரப்பு

தினத்தந்தி
|
19 Nov 2023 8:50 AM IST

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன.

சென்னை,

13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை இறுதி போட்டி ஆமதாபாத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்தநிலையில், உலகக்கோப்பை இறுதி போட்டியை சென்னை மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் ஒளிபரப்பு செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி) திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டதாவது:-

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்த போட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் பெரிய எல்.இ.டி திரையில் மதியம் 2 மணி முதல் ஒளிபரப்பப்பட உள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் இந்த நிகழ்வில் இணைந்து இந்திய அணிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்