< Back
மாநில செய்திகள்
நீலகிரி
மாநில செய்திகள்
உலக காபி தின விழா கொண்டாட்டம்
|7 Oct 2023 2:45 AM IST
உலக காபி தின விழா கொண்டாடப்பட்டது.
உலக காபி தினத்தையொட்டி கூடலூர் காபி வாரியம் சார்பில், காபி தின விழா தாலுகா அலுவலகம் முன்பு அரசு அலுவலர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களுக்கும் சூடாக காபி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவை கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா பொதுமக்களுக்கு காபி வழங்கி தொடங்கி வைத்தார். முன்னதாக காபி பயன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் தாசில்தார் ராஜேஸ்வரி, தீயணைப்பு நிலைய அலுவலர் மார்ட்டின், கூடலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் குமார், ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் சிவக்குமார் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக காபி வாரிய விரிவாக்க அலுவலர் ராமஜெயம் வரவேற்றார். ஆய்வாளர் ஷீனா நன்றி கூறினார்.