அரியலூர்
உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி கோலப்போட்டி-ஊர்வலம்
|உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி கோலப்போட்டி-ஊர்வலம் நடந்தது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பாக, ஜெயங்கொண்டம் வட்டார போஷான் அபியான் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பாக உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு கோலப்போட்டி நடைபெற்றது. மேலும் தாய்ப்பாலின் முக்கியத்துவம் மற்றும் ஊட்டச்சத்து உணவுகள் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சாருநிலா தலைமையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஒன்றிய அலுவலக மேலாளர் முருகானந்தம், மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக போஷான் அபியான் திட்ட ஒருங்கிணைப்பாளர் கவியரசி வரவேற்று பேசினார்.
ஊர்வலமானது ஒன்றிய அலுவலகம் முன்பாக தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாக அண்ணாசிலைக்கு சென்று மீண்டும் ஒன்றிய அலுவலகம் முன்பாக வந்து முடிவடைந்தது. ஊர்வலத்தில் மேற்பார்வையாளர்கள் வளர்மதி, நவமணி, சத்தியபாமா உள்ளிட்ட ஊட்டச்சத்து அங்கன்வாடி பணியாளர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முடிவில் வட்டார திட்ட உதவியாளர் சரவணகுமார் நன்றி கூறினார்.