< Back
மாநில செய்திகள்
உலக தாய்ப்பால் வார விழா பற்றிய விழிப்புணர்வு பேரணி
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

உலக தாய்ப்பால் வார விழா பற்றிய விழிப்புணர்வு பேரணி

தினத்தந்தி
|
6 Aug 2023 2:27 PM IST

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக தாய்ப்பால் வார விழா பற்றிய விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் காஞ்சீபுரம் மாவட்டம் சார்பில், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், உலக தாய்ப்பால் வார விழா பற்றிய விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி, மாவட்ட மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பயனாளிகள் (பாலூட்டும் தாய்மார்கள்) 120-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்