< Back
மாநில செய்திகள்
உலக மிதிவண்டி தின விழிப்புணர்வு ஊர்வலம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

உலக மிதிவண்டி தின விழிப்புணர்வு ஊர்வலம்

தினத்தந்தி
|
4 Jun 2022 7:19 PM GMT

உலக மிதிவண்டி தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் உலக மிதி வண்டி தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. 75-வது சுதந்திர தின ஆண்டினை முன்னிட்டு நேருயுவகேந்திராவுடன் இணைந்து செயல்படும் இளைஞர் மன்றங்களின் மூலம் குன்னம் ஊராட்சியில் தேசிய தன்னார்வ தொண்டர்கள் ஏற்பாட்டின்படி இந்த ஊர்வலம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் சைக்கிள்களில் முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் இளைஞர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்