< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடியில்உலக விபத்து, காயம் தின விழிப்புணர்வு ஊர்வலம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

தூத்துக்குடியில்உலக விபத்து, காயம் தின விழிப்புணர்வு ஊர்வலம்

தினத்தந்தி
|
18 Oct 2023 12:15 AM IST

தூத்துக்குடியில்உலக விபத்து, காயம் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.


தூத்துக்குடியில் உலக விபத்து மற்றும் காயம் தினம் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

ஊர்வலம்

விபத்து தடுப்பு முறைகளை மக்களிடையே பிரபலப் படுத்தவும், சாலை விதிகளின் அவசியத்தை மக்களுக்கு உணர்த்தவும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 17-ந் தேதி உலக விபத்து மற்றும் காய தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.

பரிசு

வ.உ.சி கல்லூரி முன்பு இருந்து தொடங்கிய ஊர்வலத்தை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் சிவக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள், செவிலியர் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பாதாகைகளை ஏந்தியபடி சென்றனர். வ.உ.சி. கல்லூரி முன்பு தொடங்கிய ஊர்வலத்தில் பாளையங்கோட்டை ரோடு, வி.வி.டி சந்திப்பு வழியாக மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியை வந்தடைந்தது. அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் உலக விபத்து மற்றும் காயம் தின விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சிகளில் மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் கலைவாணி, உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, விபத்து மற்றும் அவசர சிகிச்சை துறைத் தலைவர் மணிமேகலை மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்