< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
பல்நோக்கு கூட்டுறவு சங்கம் அமைப்பதற்கான ஆய்வுக்கூட்டம்
|11 Nov 2022 12:15 AM IST
கொடைக்கானல் மலைப்பகுதியில் பல்நோக்கு கூட்டுறவு சங்கம் அமைப்பதற்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் பல்நோக்கு கூட்டுறவு சங்கம் அமைப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் கொடைக்கானலில் நடந்தது. இதற்கு வட்டார கூட்டுறவு சார்பதிவாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கொடைக்கானல் மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கூட்டுறவு சங்கம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள் திரளாக கலந்துகொண்டு தங்கள் கோரிக்கை குறித்து கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.