< Back
மாநில செய்திகள்
உழைக்கும் கைகள் ஒன்று சேர்ந்து புதிய உலகம் படைப்போம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாநில செய்திகள்

உழைக்கும் கைகள் ஒன்று சேர்ந்து புதிய உலகம் படைப்போம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தினத்தந்தி
|
1 May 2024 10:16 AM IST

குருதியை வியர்வையாக்கி உழைப்பால் உலகை உயர்த்தும் அனைத்து உழைப்பாளர்களையும் வாழ்த்திப் போற்றுவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மே தினம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மே தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மே தின வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,

"குருதியை வியர்வையாக்கி உழைப்பால் உலகை உயர்த்தும் அனைத்து உழைப்பாளர்களையும் தொழிலாளர் தினத்தில் வாழ்த்திப் போற்றுவோம். மேதினியில் வாழும் உழைப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க ஒற்றுமையை உண்டாக்க மே நாளில் உறுதியேற்போம். உழைக்கும் கைகள் ஒன்று சேர்ந்து புதிய உலகம் படைப்போம்." என அதில் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்