< Back
மாநில செய்திகள்
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தை செயல்படுத்திட பணிக்குழு கூட்டம்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தை செயல்படுத்திட பணிக்குழு கூட்டம்

தினத்தந்தி
|
22 Jun 2023 2:01 PM IST

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தை செயல்படுத்திட பணிக்குழு கூட்டம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடந்தது.

பணிக்குழு கூட்டம்

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தை செயல்படுத்திட மாவட்ட அளவிலான பணிக்குழு கூட்டம் அமைக்கப்பட்டு, முதல் கூட்டம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் கீழ் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் 11 மாவட்டங்களுடன் மீதமுள்ள 27 மாவட்டங்களிலும் 2022-23-ம் நிதியாண்டு முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வங்கி கணக்கை எஸ்.என்.ஏ. கணக்காக நிர்வகிக்கும் பொருட்டும் பொது நிதி மேலாண்மை அமைப்பில் (PFMS) இணைத்து பயன்படுத்திடும் பொருட்டு ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் சேமிப்பு கணக்கானது மாவட்ட கலெக்டர் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்ற பெயரில் ரூ.30 லட்சத்தில் வங்கி கணக்கு பெறப்பட்டுள்ளது.

பெண் குழந்தைகளின் கல்வி

சமூக நலத்துறை இயக்குநரின் கடிதத்தின்படி, மாவட்ட அளவில் திட்ட செயல்பாடுகளைத் திட்டமிடவும் அங்கீகரிக்கவும், கண்காணிக்கவும் மற்றும் செயல்படுத்தவும் தலைவர், நோடல் அதிகாரி, பிற உறுப்பினர்கள் அடங்கிய மாவட்ட அளவிலான பணிக்குழு அமைத்திடுமாறு தெரிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் முக்கிய கொள்கை: பெண் குழந்தைகளை கொண்டாடி அவர்களுக்கான கல்வியை செயல்படுத்துதல் வேண்டும். பாலினம் சார்ந்த தேர்ந்தெடுத்தலை தடுத்தல், பெண் குழந்தையின் உயிர் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் பெண் குழந்தைகளின் கல்வியை உறுதி செய்தல் ஆகும். இந்த கூட்டத்தில் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்