கடலூர்
கடலூர் டாஸ்மாக் குடோன் முன்புசுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
|கடலூர் டாஸ்மாக் குடோன் முன்பு சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் முதுநகர்,
டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்களின் வேலை உரிமையை பறிப்பதை கண்டிப்பது, கூலியை உயர்த்தி வழங்க வேண்டும், மனமகிழ் மன்றம், தனியார் ஏ.சி. பார் சம்பந்தப்பட்ட பெட்டிகளை ஏற்றும் பணியை பல ஆண்டு காலமாக நடைமுறையில் உள்ள படியே செயல்படுத்த வேண்டும், மதுபான உற்பத்தி ஆலை நிர்வாகங்கள் இறக்கு கூலியை உயர்த்தி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம் சி.ஐ.டி.யு. சார்பில் கடலூர் சிப்காட்டில் உள்ள டாஸ்மாக் குடோன் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சுப்பராயன் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் உத்திராபதி, சுமைப்பணி செயலாளர் தண்டபாணி, சுமைப்பணி மாவட்ட சிறப்பு தலைவர் முருகன், மாவட்ட நிர்வாகிகள் பாபு, டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சங்க கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷம் எழுப்பினர்.