< Back
தமிழக செய்திகள்

திருவாரூர்
தமிழக செய்திகள்
அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

3 Nov 2022 12:19 AM IST
நீடாமங்கலத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீடாமங்கலம்;
பதவி உயர்வு கோரி நீடாமங்கலத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் வட்டார அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் தங்களுக்கு மேற்பார்வையாளர் பதவி உயர்வு வழங்க கோரி இந்த போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறினர். போராட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் பலர் கலந்து கெண்டனர்.