திருவள்ளூர்
திருவாலங்காட்டில் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்
|திருவாலங்காட்டில் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு தொழிலாளர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
திருவாலங்காட்டில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு நிரந்தரம் மற்றும் ஒப்பந்த முறையில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று கூட்டுறவு சர்க்கரை ஆலை நுழைவு வாயிலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சர்க்கரை ஆலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
இதில் 33 ஆண்டுகளாக நிலவி வரும் இரட்டை ஊதிய முறையை நீக்கி ஒரேமாதிரியான ஊதிய முறையை அமல்படுத்த வேண்டும், 40 ஆண்டுகளாக கூலித்தொழிலாளர்களாக இருப்பவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், இரட்டை ஊதியம் முறையை ஒழிக்குமாறு சென்னை தொழில் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சர்க்கரைத்துறை ஆணையரகம், ஆலைய நிர்வாகம் மேல்முறையீடு செய்தது ஏன்? உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஆலை ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.