< Back
மாநில செய்திகள்
வீட்டில் அழுகிய நிலையில் தொழிலாளி பிணம் - போலீசார் விசாரணை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

வீட்டில் அழுகிய நிலையில் தொழிலாளி பிணம் - போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
11 Jun 2022 5:24 PM IST

திருவள்ளூர் அருகே வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த தொழிலாளி பிணத்தை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் கசவநல்லாத்தூர் கிராமத்தில் பூட்டிய வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக கடம்பத்தூர் கிராம நிர்வாக அலுவலருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். தகவலையடுத்து கடம்பத்தூர் கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் அளித்த புகாரின் பேரில் கடம்பத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு குமார் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்றனர். பின்னர் பூட்டி கிடந்த வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அழுகிய நிலையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கி கிடந்த ஆண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம் புத்தூரைச் சேர்ந்த லோகேஷ் (வயது 45) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கடம்பத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்