< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
பீர்பாட்டிலால் தொழிலாளி மீது தாக்குதல்
|2 Aug 2023 2:36 AM IST
தஞ்சையில் பீர்பாட்டிலால் தொழிலாளியை தாக்கியவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
தஞ்சாவூர்;
தஞ்சை நியூ பாத்திமா நகரை சேர்ந்தவர் மைக்கேல் ராஜ் (வயது 58). தொழிலாளி. இவர் சைக்கிளில் விளார் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். ஒரு தனியார் மண்டபம் அருகே சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் திடீரென சைக்கிளை வழிமறித்து நிறுத்தினார். அப்போது அவர் குடிக்க தண்ணீர் பாட்டில் கொடுக்குமாறு மைக்கேல்ராஜிடம் கேட்டார். அதற்கு அவர் என்னிடம் தண்ணீர் பாட்டில் இல்லை என்று கூறினார். இதை கேட்டு ஆத்திரம் அடைந்த அந்த நபர் தான் வைத்திருந்த பீர் பாட்டிலால் மைக்கேல் ராஜை தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் காயம் அடைந்த மைக்கேல்ராஜ் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின் பேரில் தாலுகா போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.