< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
தொழிலாளி தற்கொலை
|9 May 2023 12:30 AM IST
தேவதானப்பட்டி அருகே தொழிலாளி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேவதானப்பட்டி அருகே உள்ள ஜெயமங்கலம் மேலதெருவை சேர்ந்தவர் செந்தில் (வயது 40). தென்னை மரம் ஏறும் தொழிலாளி. இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் நேற்று ஜெயமங்கலம்-பெரியகுளம் மெயின் ரோடு தனியார் தோப்பில் உள்ள ஒரு மரத்தில் செந்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.