தென்காசி
தொழிலாளி தற்கொலை
|தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சுரண்டை:
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே தெற்கு கழுநீர்குளத்தை சேர்ந்தவர் சுடலைமணி மகன் நல்லதம்பி (வயது 29). கூலித்தொழிலாளி. திருமணம் ஆகாதவர். அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல குடித்துவிட்டு வந்த நல்லதம்பியை அவரது பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நல்லதம்பி, நேற்று முன்தினம் நள்ளிரவு, வீட்டின் அருகில் உள்ள புளிய மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று காலையில் மரத்தில் தொங்கிய நிலையில் நல்லதம்பி பிணமாக கிடந்ததை கண்ட அவரது தந்தை சுடலைமணி வீ.கே.புதூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கவுசல்யா தலைமையிலான போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.