< Back
மாநில செய்திகள்
தொழிலாளி தற்கொலை
திண்டுக்கல்
மாநில செய்திகள்

தொழிலாளி தற்கொலை

தினத்தந்தி
|
30 March 2023 9:56 PM IST

பழனி அருகே கல்குவாரி குட்டையில் குதித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

பழனி அருகே உள்ள அமரபூண்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 54). கூலித்தொழிலாளி. நேற்று இவர், அதே பகுதியில் உள்ள கல்குவாரி குட்டை தண்ணீரில் பிணமாக மிதந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஆயக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கருத்து வேறுபாடு காரணமாக முருகேசனின் மனைவி விஜயலட்சுமி (36) கடந்த சில நாட்களுக்கு பிரிந்து சென்று விட்டார். இதனால் மனமுடைந்த முருகேசன் கல்குவாரி குட்டையில் குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்