< Back
மாநில செய்திகள்
ஸ்ரீமுஷ்ணத்தில்    விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
கடலூர்
மாநில செய்திகள்

ஸ்ரீமுஷ்ணத்தில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

தினத்தந்தி
|
12 Dec 2022 12:15 AM IST

ஸ்ரீமுஷ்ணத்தில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.


ஸ்ரீமுஷ்ணம்,

ஸ்ரீமுஷ்ணம் கோ.ஆதனூரை சேர்ந்தவர் கணேசன் மகன் பழனிசாமி (வயது 45). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி சங்கீதா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில் குடிபழக்கம் உடைய பழனிசாமி சம்பவத்தன்று மது குடிப்பதற்காக மனைவி சங்கீதாவிடம் பணம் கேட்டதாக தெரிகிறது. அதற்கு அவர் மறுத்து விட்டார். இதனால் பழனிசாமி தனது வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார்.

இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த, அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று பழனிசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி சங்கீதா ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்