< Back
மாநில செய்திகள்
தொழிலாளி தற்கொலை
திருநெல்வேலி
மாநில செய்திகள்

தொழிலாளி தற்கொலை

தினத்தந்தி
|
22 Nov 2022 3:33 AM IST

தொழிலாளி தற்கொலை செய்தார்

களக்காடு:

களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் வடக்கு ரதவீதியை சேர்ந்தவர் முருகன் (வயது 35). கூலி தொழிலாளி. இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். முருகனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இதனால் அவர் சம்பளத்தை வீட்டிற்கு கொடுக்காமல் மது அருந்தி வந்தார்.

கடந்த 18-ந் தேதி போதையில் வீட்டிற்கு வந்த முருகன், தனது மனைவியிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்தார். பின்னர் வீட்டில் இருந்த பணத்தை எடுத்து சென்று விட்டார். அதன் பின்னர் சிதம்பரபுரம் வடக்கு கால்வாய் கரையில் உள்ள இசக்கியம்மன் கோவில் அருகே முருகன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி முருகன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அவரது தந்தை கனகராஜ் களக்காடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன், சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்