< Back
மாநில செய்திகள்
தொழிலாளி தற்கொலை
சேலம்
மாநில செய்திகள்

தொழிலாளி தற்கொலை

தினத்தந்தி
|
14 Nov 2022 1:41 AM IST

வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

ஆத்தூர்:

ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் 13-வது வார்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் எட்டிக்கண் (வயது 52), கூலித்தொழிலாளி. இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்ததாக தெரிகிறது. இதனை வீட்டில் உள்ளவர்கள் கண்டித்துள்ளனர். இதில் மனம் உடைந்த எட்டிக்கண் அதே பகுதியில் உள்ள வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்