< Back
மாநில செய்திகள்
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

தினத்தந்தி
|
24 Aug 2022 10:18 PM IST

கிருஷ்ணகிரியில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி அடுத்த மோட்டூரை சேர்ந்தவர் திருப்பதி (வயது30). கூலித்தொழிலாளி. இவர் கடந்த, 22-ந் தேதி கிருஷ்ணகிரியில் தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தாபா ஓட்டல் முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கே.ஆர்.பி. டேம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மேலும் செய்திகள்