திருநெல்வேலி
தொழிலாளி தற்கொலை
|தொழிலாளி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை
களக்காடு:
களக்காடு அருகே நடுச்சாலைப்புதூர் நடுத்தெருவை சேர்ந்தவர் நாராயணன் (வயது 70). தொழிலாளி. இவரது மனைவி ரதியம்மாள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனால் நாராயணன் அதே ஊரில் தனது மகளான அமுதாதேவியுடன் வசித்து வந்தார். நாராயணனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இதனால் அவர் அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வருவது வழக்கம். அதுபோல கடந்த 9-ந் தேதி இரவில் மது அருந்திய போதையில் வீட்டிற்கு வந்த அவர் தகராறில் ஈடுபட்டார். பின்னர் திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் கருகிய அவரை உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று அவர் இறந்தார். இதுகுறித்து களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.