< Back
மாநில செய்திகள்
மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை

தினத்தந்தி
|
25 Jun 2022 1:10 AM IST

மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

ஆரல்வாய்மொழி:

மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

ஆரல்வாய்மொழி அருகே உள்ள தாழக்குடி விளாங்காட்டுகாலனியை சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது 60), தொழிலாளி. இவருடைய மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு சதீஸ் என்ற மகன் உள்ளார். இசக்கியப்பனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாகவும், வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் மது குடித்து செலவழித்து விட்டு மனைவியிடமும் பணம் கேட்டு தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அதற்கு சரஸ்வதி தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால், மனமுடைந்த இசக்கியப்பன் வீட்டில் வாழை மரத்துக்கு பயன்படுத்தும் பூச்சிகொல்லி மருந்தை மதுவில் கலந்து குடித்து விட்டு வாந்தி எடுத்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலையில் இசக்கியப்பன் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்