< Back
மாநில செய்திகள்
ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி தற்கொலை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி தற்கொலை

தினத்தந்தி
|
11 Jun 2022 2:00 AM IST

திருவட்டார் அருகே ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

திருவட்டார்:

திருவட்டார் அருகே ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

திருவட்டார் அருகே இட்டகவேலி பருத்தி விளையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 41). ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் சம்பவத்தன்று பாலகிருஷ்ணன் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் பாலகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது பாலகிருஷ்ணனுக்கு மது பழக்கம் இருந்ததாகவும், மது பழக்கத்துக்கு அடிமையாகி வாழ்வதை விட சாவதே மேல் என கூறி வந்ததாகவும், அதை தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிய வந்தது.

மேலும் செய்திகள்