< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
விஷம் குடித்த தொழிலாளி சாவு
|30 May 2022 8:56 PM IST
சங்கரன்கோவில் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே நகரம் உரக்கடை தெருவைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவருடைய மகன் பிரமுத்து (வயது 21). கூலி தொழிலாளியான இவர் இரவில் வீட்டுக்கு தாமதமாக வந்ததை பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த பிரமுத்து கடந்த 23-ந்தேதி திடீரென்று விஷம் குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார்.
உடனே அவருக்கு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி பிரமுத்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.