< Back
மாநில செய்திகள்
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
19 May 2022 11:27 PM IST

தேன்கனிக்கோட்டை அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தேன்கனிக்கோட்டை:

தளி அடுத்த மதகொண்டபள்ளியை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 30), கூலித்தொழிலாளி. இவர் தனது மாமன் மகளான அருணா (25) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் தம்பதியருக்குள் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கணவரிடம் கோபித்து கொண்டு அருணா, தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதில் மனமுடைந்த நவீன்குமார் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன்பேரில் தளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்