< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
தொழிலாளி தற்கொலை
|17 Oct 2023 3:45 AM IST
உத்தமபாளையம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டி வடக்கு ரத வீதியை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 67). கூலித்தொழிலாளி. இவர் இதய நோயால் அவதியடைந்து வந்தார். இதனால் விரக்தியடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது விஷத்தை குடித்தார். இதில், மயங்கி விழுந்த வேலுச்சாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.