விருதுநகர்
தொழிலாளி தற்கொலை
|தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகன் மகாலிங்கம் (வயது 36). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு அச்சகத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி நளினி. பட்டாசு ஆலையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மது குடிக்கும் பழக்கம் உள்ள மகாலிங்கத்துக்கு வயிற்று வலியும் இருந்துள்ளது. இதற்கு பல்வேறு இடங்களில் மருத்துவம் பார்த்தும் நோய் குணமாகவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்த நளினி தனது கணவர் தூக்கில் தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்ைசக்காக கொண்டு சென்றனர். அங்கு மகாலிங்கத்தை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து நளினி சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.