< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
தொழிலாளி தற்கொலை
|4 July 2023 1:15 AM IST
சாணார்பட்டி அருகே தொழிலாளி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சாணார்பட்டி அருகே உள்ள வேலம்பட்டியை சேர்ந்தவர் வீரக்குமார் (வயது 28). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி அனுசுயா என்ற மனைவியும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்தநிலையில் வீரக்குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட வீரக்குமார் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.