< Back
மாநில செய்திகள்
புளியந்தோப்பில் தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை - 4 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு
சென்னை
மாநில செய்திகள்

புளியந்தோப்பில் தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை - 4 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு

தினத்தந்தி
|
29 Jun 2022 10:06 AM IST

புளியந்தோப்பில் தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

சென்னை புளியந்தோப்பு நெடுஞ்சாலை 5-வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் என்ற ஆதி (வயது 46). இவர் அண்ணா சாலையில் உள்ள ஒரு கம்பெனியில் கூலி வேலை செய்து வந்த நிலையில், நேற்று இரவு 7 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் சுரேஷை கத்தியால் சரமாரியாக தாக்கி கொலை செய்தனர்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து புளியந்தோப்பு போலீசில் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த உதவி கமிஷனர் அழகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுரேஷ் உடலை மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியில் நடைபெற்ற இந்த கொலையால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சுரேசுக்கு ஜோதி என்ற மனைவியும், 15 வயதில் ஒரு மகனும், 10 வயதில் மகளும் உள்ளனர். இவர் மீது ஏற்கனவே புளியந்தோப்பு போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்