< Back
மாநில செய்திகள்
கத்தியால் குத்தி தொழிலாளி கொலை
திருவாரூர்
மாநில செய்திகள்

கத்தியால் குத்தி தொழிலாளி கொலை

தினத்தந்தி
|
3 Jun 2023 12:15 AM IST

கத்தியால் குத்தி தொழிலாளி கொலை

வடுவூர் அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தி தொழிலாளியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடியவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவில் திருவிழா

திருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே உள்ள கட்டக்குடி கிராமத்தில் தூண்டில் வீரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று திருவிழா நடந்தது. விழாவில் கட்டக்குடி முடுக்கு தெருவை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் காவடி எடுத்தார்.

அவரிடம், அதே தெருவை சேர்ந்த சிவக்குமார்(வயது42) என்பவர் தகராறு செய்துள்ளார். இதனை பார்த்த சந்திரசேகரனின் மாமாவும், கூலி தொழிலாளியுமான உத்திராபதி(40), சிவக்குமாரை தட்டிக்கேட்டுள்ளார்.

கத்தியால் குத்திக்கொலை

இதில் ஏற்பட்ட தகராறில் உத்திராபதியை, சிவக்குமார் தான் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக கழுத்து மற்றும் இடுப்பு பகுதியில் குத்தினார்.

இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், உத்திராபதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

வலைவீச்சு

இதுகுறித்து வடுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சிவக்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்