தேனி
தொழிலாளிக்கு கத்திக்குத்து
|தேனி அருகே வீரபாண்டி சாவடி தெருவை சேர்ந்தவர் அஜித் (வயது 24). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இவர், தனது நண்பரான தனசேகரன் என்பவருடன் வீரபாண்டியில் இருந்து மோட்டார்சைக்கிளில் கோட்டூருக்கு சென்று கொண்டிருந்தார். தேனி-குமுளி பைபாஸ் சாலையில் தனியார் தேநீர் விடுதி அருகே வந்தபோது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அஜித்திற்கு பின்னால் வந்த ஆட்டோ அவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதை அவர் தட்டிகேட்டபோது அந்த ஆட்டோ டிரைவர் தான் கையில் வைத்திருந்த கத்தியால் அஜித்தின் முகத்தில் குத்தினார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் கத்திக்குத்தில் காயமடைந்த அஜித்தை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து அவர் வீரபாண்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஆட்ேடா டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.