< Back
மாநில செய்திகள்
கார் மோதி சலவை தொழிலாளி பலி
நாமக்கல்
மாநில செய்திகள்

கார் மோதி சலவை தொழிலாளி பலி

தினத்தந்தி
|
19 Feb 2023 12:15 AM IST

எலச்சிபாளையத்தில் கார் மோதி சலவை தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

எலச்சிபாளையம்

எலச்சிபாளையம் அடுத்த சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 56). சலவைத் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் எலச்சிபாளையம் வேபிரிட்ஜ் அருகே அவரது சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் அவரது சைக்கிளில் மோதியது. இதில் சுப்ரமணியனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்