< Back
மாநில செய்திகள்
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

தினத்தந்தி
|
16 Nov 2022 12:15 AM IST

கிருஷ்ணகிரியில் மின்சாரம் தாக்கி கேரளாவை சேர்ந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

கிருஷ்ணகிரியில் மின்சாரம் தாக்கி கேரளாவை சேர்ந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

தொழிலாளி

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் நெடுங்காடு அருகே உள்ள காலேப்பள்ளியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் ரஞ்சித் (வயது 29). இவர் கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் அறை எடுத்து தங்கி கூலி வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அவர் தங்கி உள்ள கட்டிடத்தில் நின்று இருந்தார். அப்போது அருகில் சென்ற மின் கம்பியில் எதிர்பாராவிதமாக ரஞ்சித்தின் கை பட்டது. அப்போது மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

பரிதாப சாவு

இதனால் அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று இறந்த ரஞ்சித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்