< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி கூலி தொழிலாளி பலி
நாமக்கல்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி கூலி தொழிலாளி பலி

தினத்தந்தி
|
16 Sept 2022 1:04 AM IST

குமாரபாளையத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி கூலி தொழிலாளி இறந்தார்.

பள்ளிபாளையம்

குமராபாளையம் கல்லாங்காடு வளசு பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா (வயது 33). இவரது கணவர் சுப்பிரமணி (38). இவர் கூலி வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று மதியம் தனது மோட்டார் சைக்கிளில் கோவை செல்லும் நெடுஞ்சாலையில் நேரு நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது எதிரே வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சுப்பிரமணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் குமராபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி உயிரிழந்தார். இது குறித்து சித்ரா குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ராமநாதபுரத்தை சேர்ந்த லாரி டிரைவர் பெர்க்மான்ஸ் என்பவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்