தூத்துக்குடி
எலக்ட்ரிக் ஆட்ே்டா கவிழ்ந்து தொழிலாளி பலி
|எலக்ட்ரிக் ஆட்ே்டா கவிழ்ந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்
ஸ்ரீவைகுண்டம்:
கோவில்பட்டி வேலாயுதபுரத்தை சேர்ந்தவர் சித்திரைகனி (வயது 60). அதே ஊரை சேர்ந்த பிரான்சிஸ் வேலாயுதம் மகன் செல்வகுமார் (22), மற்றும் எலக்ட்ரிக் ஆட்டோ டிரைவரான அமல்ராஜ் ஆகியோர் சிப்ஸ் பாக்கெட் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்தனர். இவர்கள் ஆட்டோவில் கடைகளுக்கு சென்று வியாபாரம் செய்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த 7-ந்தேதி கோவில்பட்டியில் இருந்து எலக்ட்ரிக் ஆட்டோவில் சிப்ஸ் பாக்கெட்டுகளை ஏற்றி கொண்டு வியாபாரத்திற்கு நான்கு வழிச்சாலையில் தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்தனர். வல்லநாடு சாலை அகரம் அருகே ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது ஆட்டோ திடீரென பழுதாகி சாலையில் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் இருந்த சித்திரைகனிக்கு படுகாயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் முறப்பநாடு போலீசார் அவர்களை மீீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி சித்திரைகனி நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முறப்பநாடு இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.